கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற திட்டம்! தொடர்புகொள்ள முடியவில்லை என அறிவிப்பு
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையின் 4ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக்காரர்களால் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்திற்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை என பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த பணத்தொகையை நீதிமன்றத்தில் கையளிக்கும் போது கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் இதனை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பணத்தொகை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற வேண்டியிருக்கும் நிலையில், அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,