மின் கட்டணத்துடன் மற்றுமொரு புதிய கட்டணம் - கசிந்துள்ள அதிர்ச்சித் தகவல்
தமது பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளுக்கு ஏற்படும் செலவை அப்பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்தில் அறவிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின் பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணத்துடன் இணைக்க முயற்சி
இது தொடர்பில் மின் பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக மேலும் தெரிவிக்கையில், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் வீதி விளக்குகளின் 'வோட்' அளவைக் கணக்கிட்டு, அத்தொகையை அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடையே பகிர்ந்து, அவர்களின் மின்சாரக் கட்டணத்துடன் இணைக்க முயற்சிக்கப்படுகிறது.
இவ்வாறு சேர்க்கப்படும் தொகையானது, பாவனையாளரின் மின்சாரக் கட்டணப் பெறுமதியில் 2.2% இற்கு மேற்படாத ஒரு தொகையாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிந்துரை
வீதி விளக்குகளைப் பராமரிக்கும் மற்றும் முகாமைத்துவம் செய்யும் அதிகாரம் தற்போது பிரதேசசபை, நகரசபை மற்றும் மாநகரசபைகள் வசமே உள்ளது.
எனினும், புதிய யோசனையின் ஊடாக இந்த அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து நீக்கி, அதனை நிர்வகிக்க தனியானதொரு நிறுவனத்தை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri