தமிழ் கிராம அலுவலக பிரிவுகளை மகாவலிக்குள் உள்வாங்க திட்டம்! - ரவிகரன் குற்றச்சாட்டு

Srilanka Mullaitivu Tamil nation alliance
By Independent Writer May 03, 2021 08:58 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கொக்கிளாய் கிழக்கு, கொக்களிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கருநாட்டுக்கேணி, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய எட்டு தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் இச்செயற்பாடானது, தனித் தமிழ் முல்லைத்தீவில், சிங்கள அலகொன்றினை ஏற்பாடுத்துவதற்கான முயற்சி என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பான மகஜர் ஒன்றினை அப்பகுதி மக்கள் 03.05.2021 இன்று, ரவிகரனிடம் கையளித்திருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாயாற்றுக்குத் தெற்கேயான காணிகள் சம்பந்தப்பட்ட விடயத்திலே, அந்த மக்களால் 03.05.2021 இன்று என்னிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரை உடனடியாக எனது கட்சித் தலைமைக்கும், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கையளிக்கவிருக்கின்றேன்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் தொடக்கம் செம்மலை வரையான எட்டு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய மக்களையும், மக்களோடு சேர்ந்த காணிகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தனது நிர்வாகத்திற்குள் உள்வாங்குவதற்கு தீவிரமாக செயற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இவ்வாறானதொரு முன்னெடுப்பினை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்திருந்த நிலையில் அதனை அப்பகுதி மக்கள் நிராகரித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தனது நிர்வாக அலகிற்குள் குறித்த எட்டு கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்வாங்குவதற்கு தீவிரமாகச் செயற்படுகின்றது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

கொக்குத்தாடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் கிழக்கு, கொக்குளாய் மேற்கு, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய எட்டு கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய காணிகளின் நிர்வாகத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தமது நிர்வாகத்திற்குள் உள்வாங்குவதற்கான தீர்மானத்தினை எடுத்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தான் அந்த மக்களுடைய குற்றச்சாட்டாகும்.

இது ஏற்கனவே கடந்த 23.10.2020ஆம் திகதியன்று இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு, எங்களுடைய தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதின்மூன்று பேர் கையொப்பமிட்டு மகாவலி அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்சவிடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்ததுடன், இந்த செயற்பாடுகள் சிறிது காலம் கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மகாவலி அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்சவிற்குத் தெரிந்தோ அல்லது, தெரியாமலோ மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையானது இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தி, மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒருதிட்டத்தினை வலிந்து திணித்து, வெலிஓயா என்று உருவாக்கப்பட்ட சிங்களப் பகுதிகளுடன் இந்த மக்களை இணைக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றார்கள்.

இந்த நடவடிக்கையினை அப்பகுதிமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் நிராகரிக்கின்றனர் இப்படியானதொரு திட்டத்தினை இவர்கள் ஏன் வலிந்து திணிக்க வேண்டும் என்பது தான் அந்த மக்களுடைய கேள்வியாகும். இந்த எட்டு கிராம அலுவலர் பிரிவுகளும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்குகின்றன.

தொடர்ந்தும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் காணி நிர்வாகத்தின் கீழேயே இந்த எட்டு கிராம அலுவலர் பிரிவுகளும் இயங்க வேண்டும் என அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். தம்மைப் பிரித்து சிங்கள சிங்கள ஆட்சியாளர்களுடனோ, சிங்கள மக்களுடனோ சேர்ந்த ஒரு நிர்வாகத்திற்குள் தம்மை சிறுபான்மையினராக்கும் எண்ணத்துடன் இந்த செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் இத்தகைய செயற்பாடானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. குறிப்பாக ஏற்கனவே தமிழர்களின் பூர்வீக தாயகப் பகுதியான மணலாற்றில் சிங்கள மயமாக்கலை இவர்கள் வலிந்து திணித்துள்ளனர். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக மணலாற்றினை அண்டிய தமிழ் குடியிருப்புக்களையும் ஏற்கனவே சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளோடு இணைப்பதனூடாக தமிழ் மக்களை அங்கு சிறுபான்மையினராக்கி, பெரும்பான்மையாக சிங்கள மக்களை அப் பிரதேசத்திற்குள் உள்வாங்கி, அவ்வாறு உருவாக்கப்படுகின்ற பகுதியை ஒரு மாவட்ட அலகாகவோ அல்லது, பிரதேச அலகாகவோ தங்களுடைய திட்டத்திற்கேற்ப தனித் தமிழ் முல்லைத்தீவில் ஒரு சிங்கள அலகை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகத்தின் இது இருக்கின்றது.

அதேவேளை வடக்கையும், கிழக்கையும் இணைக்கின்ற தமிழர்களின் பூர்வீக பகுதிகளாக இந்த இடங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் வடகிழக்கை இணைக்கும் இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்து சிங்களமயப்படுத்தி வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளை கூறுபோடும் நடவடிக்கையாகவும் இது அமைந்துள்ளது.

நிச்சயமாக இவ்விடயம் தொடர்பாக எங்களுடைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விடயத்தில் தங்களுடைய இறுக்கமான கரிசனையைக் காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த மக்கள் எங்களுடைய தமிழ் மக்கள், இவை எங்களுடைய தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள், இப்டியாக இருக்க இந்த மக்களையும், எமது நிலங்களையும் கூறுபோட இவர்கள் செய்யும் நடவடிக்கைகளை நான் வன்மையாக் கண்டிக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US