கொழும்பில் இடைநிறுத்தப்பட்ட இலகு தொடருந்து திட்டத்தை மீள ஆரம்பிக்க திட்டம் - செய்திகளின் தொகுப்பு
கொழும்பில் இடைநிறுத்தப்பட்டுள்ள இலகு தொடருந்து போக்குவரத்து திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய வெளியுறவு அமைச்சரை நேற்று (04.05.2024) கொழும்பில் சந்தித்த பின்னரே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக 2023ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கையின் அமைச்சரவை, இலகு தொடருந்து போக்குவரத்து திட்டம் தொடர்பில் கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான காலவரையறையை முடிவு செய்ய தீர்மானித்திருந்தது.
அத்துடன் இது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அமைச்சர் சப்ரி இலங்கை அரசாங்கத்தின் கருத்தை வெளியிட்டுள்ளார்.
எனினும், ஜப்பானிய யென் கடன்களை மறுசீரமைத்த பின்னரே அபிவிருத்தி கடன்கள் வழங்கப்படும் என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |