மத்தள விமான நிலையத்தின் திட்டத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற யோசனை
ஹம்பாந்தோட்டை - மத்தள சர்வதேச விமான நிலையத்தின் திட்டத்தை 2 வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனம் கூட்டாக இணைந்து இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர கூறியுள்ளார்.
மத்தள விமான நிலையம்
அத்தோடு, குறித்த நிறுவனங்களின் நிர்வாகத்துடன் பல தடவைகள் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அந்த கலந்துரையாடல்கள் பலனளித்துள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, ரஷ்ய - இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திற்கு மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மாற்றுவது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரஷ்ய - இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் மத்தள விமான நிலையத்தின் இலாபத்தில் ஒரு பங்கை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் வகையிலான ஒப்பந்தமொன்று எதிர்வரும் நாட்களில் கைச்சாத்திடப்படுமென ருவன்சந்திர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri