மைத்திரி தரப்பை அமைச்சரவையிலிருந்து கூண்டோடு நீக்க திட்டம்!
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இரண்டு அமைச்சரவை அமைச்சுகளையும் இரண்டு இராஜாங்க அமைச்சுகளையும் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவின் ஆதரவுடன் பதவியை கைப்பற்ற அரசாங்கம்கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
