தடுப்பூசி தொடர்பில் சுகாதார துறையினருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை
கோவிட் தடுப்பூசியான சினோபார்ம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை கடந்த மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
இதனடிப்படையில், முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மக்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி ஒரு மாதம் பூர்த்தியாகும் தினத்தில் முதலாவது தடுப்பூசியை போட்டுக்கொண்ட இடத்திலேயே இரண்டாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, சுகாதார துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுகாதார துறையினர் அடையாளம் கண்டுள்ள வேறு மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை சரியாகவும் தொடர்ந்தும் மேற்கொள்ளும் தேவை குறித்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே அடுத்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நிலலும் கோவிட் ஆபத்தின் அடிப்படையில் சுகாதார துறையினரின் பரிந்துரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி போடும் வேலைத்திட்டம், பின்னர், காலி, மாத்தறை,குருணாகல் மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டது.
இதுவரை 15 லட்சத்து 3 ஆயிரத்து 635 பேர் வரை முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை நேற்றிரவு இலங்கைக்கு வந்தடைந்த ஸ்புட்னிக் தடுப்பூசி கண்டி மாவட்டதை கேந்திரமாக கொண்டு வழங்கப்படவுள்ளது.