மாமரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பத்தலைவர் பரிதாபமாக உயிரிழப்பு
மாமரத்தில் ஏறி கிளையொன்றை வெட்டியவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மானிப்பாய், சங்குவேலி தெற்கைச் சேர்ந்த நாகேந்திரம் நகுலேந்திரன் (வயது 48) என்ற 6 பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மாமரத்தில் 25 அடி உயரத்தில் ஏறி கிளையொன்றை வெட்டும் போது அவர் நின்ற கிளை முறிந்ததால் தவறி விழுந்துள்ளார்.
கீழே விழுந்து சுயநினைவின்றி காணப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri