ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு !
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் 1745135974 தொடர்பு இருப்பதாக கொழும்பு பேராயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பேராயர் அலுவலகத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு என திடமாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து திருப்தி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
இன்னமும் வேகமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
பிள்ளையானின் சகாவாக செயற்பட்ட அசாத் மௌலானவை நாட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அசாத் மௌலான, செனல்4 ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விசாரணைகளின் மூலம் பிள்ளையானின் பின்னணியில் இந்த தாக்குதலை யார் வழி நடத்தினார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும் என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam

எங்கே எப்போது உலகப் போர் தொடங்கும்... விளாடிமிர் புடின் விரும்பும் நாளேடு வெளியிட்ட தகவல் News Lankasri
