பொலிஸார் முன்னிலையில் பொது மக்களை அச்சுறுத்திய பிள்ளையான் கும்பல்
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பண்ணையாளர்களிடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தினப் பேரணி மோட்டார் சைக்கிள் அணியினர் அச்சுறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சித்தாண்டியில் அமைதியாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அவ் வீதியால் வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தினப் பேரணியில் வந்த ஆதரவாளர்களே இவ்வாறு நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த பொலிஸார், விசேட அதிரடிப் படையினருக்கு முன்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மோட்டார் சைக்கிள் அணியினர் நடந்து கொண்ட காட்சிகள் யுத்த காலத்தை நினைவுபடுத்துவதாக மக்கள கவலை வெளியிட்டுள்ளனர்.
பண்ணையாளர்கள் கவலை
இது குறித்து கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள்,
“எங்களது வயிற்றுப் பசிக்காக எமது வாழ்வாதாரத்திற்காக போராட்டம் நடத்துகிறோம். இதனால் யாருக்கு என்ன பாதிப்பு நாங்கள் அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையானுக்கு எதிரானவர்கள் அல்ல.
அவருக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவும் இல்லை. ஆனால் அவரது மேதின பேரணியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களை முறுக்கி எம்மை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.
பொலிஸார் இல்லை என்றால் எம்மீது தாக்குதல் நடாத்தி இருப்பார்கள். நாங்கள் எங்களது வயிற்றுப் பிழைப்புக்காக போராடுகிறோம்.
இன்று கூட இரண்டு பண்ணையாளர்களை வனஜீவராசிகள் திணைக்களம் கைது செய்துள்ளது. அவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.
இவ்வாறு எங்களது வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது . இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு எதிராக கொண்டு செல்வதற்காக 231 ஆவது நாளாக இன்றைய மே தினத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடாத்தும் எங்களை ஏன் இவர்கள் அச்சுறுத்த வேண்டும்?
வயிற்றுப் பசிக்காக வந்த எங்களை ஏன் அச்சுறுத்துகிறீர்கள் நாங்கள் யார்? நாங்களும் தமிழர்கள் தானே? நாங்களும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஏன் எங்களுடன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |














கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
