பிள்ளையானுக்கு ஆப்பு வைத்த நெருங்கிய சகாக்கள்! 30 க்கு மேற்பட்ட இரகசிய கைதுகள்
மட்டக்களப்பில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சிஐடி மற்றும் விசேட அதிரடிப்படையினர் நேற்று முற்றுகையிட்டுள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
இந்த சோதனையில் பல்வேறு கோப்புக்கள் உள்ளடங்கிய பொருட்களை சிஐடி மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிள்ளையானுக்கு நெருங்கிய சகாக்களின் செயற்பாட்டினாலேயே இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் இடம்பெறுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த சுற்றிவளைப்பின் பின்னணியில் 30 க்கு மேற்பட்ட இரகசிய கைதுகள் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி மட்டக்களப்பு, முதலாவது வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்துள்ள விசேட அதிரடிப்படை மற்றும் சிஐடியினர் முற்றுகையிட்டு நடத்திய சோதனையின் பின்னணி, மற்றும் அந்த நகர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam