சி.ஐ.டியில் இருந்து வெளியேறிய பிள்ளையான்..!
புதிய இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (20) காலை முன்னிலையாகியிருந்த நிலையில் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோவை பிரித்தானிய செனல்-4 கடந்த ஆண்டு ஜூன் 8ஆம் திகதி ஒளிபரப்பியது.
சுமார் 50 நிமிடங்கள் ஒளிபரப்பான குறித்த காணொளியில், சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ள பிள்ளையான் அணியின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான அசாத் மௌலானா என்பவரே அந்த தகவலை முன்வைத்தார்.
பின்னர், சம்பந்தப்பட்ட காணொளியின் உள்ளடக்கம் குறித்து ஆராய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட செவ்வி ஒன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
ஏப்ரல் 21 தாக்குதல்
அதில் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது அங்கு முன்னிலையாகியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
