பிள்ளையான் கலீலின் இரகசிய தொடர்பு! பிறேமினி விவகாரத்தில் சிக்கிய ஐவர்
இலங்கையில் திரிபோலி எனும் துணை இராணுவப் புலனாய்வுப் பிரிவு , 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டதாக கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, 2005 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தக் திரிபோலி குழு தொடர்ச்சியான கொலைகளில் ஈடுபட்டதாகக் கூறினார்.
முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள செயற்பாட்டாளர்களைக் கொண்ட இந்தப் படைப்பிரிவு 2005 இல் அமைக்கப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடைய கலீல் மற்றும் மொஹிதீன் போன்ற நபர்கள் கடுமையான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்று முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் பிள்ளையானிடம், அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிள்ளையானுடன் தொடர்பில் இருந்த கலீல் என்பவரிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை சம்பந்தமான விடயங்கள் சில பரபரப்பு தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய நபர்கள் பற்றியும் அவர்களின் பின்புலம் பற்றியும் வெளிவரும் தகவல்கள் பூதாகரமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அது தொடர்பில் விரிவாகா ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
