திரிபோலி படைப்பிரிவுடன் நெருங்கி செயற்பட்ட பிள்ளையான்: பகிரங்க படுத்தும் சாணக்கியன்(Video)
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் இராணுவ புலனாய்வு மற்றும் திரிபோலி படைப்பிரிவு ஆகிய அமைப்புக்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அந்த அமைப்புகளுடன் பிள்ளையான் நெருங்கி செயற்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயமானது அண்மையில் வெளியாகிய சனல்-4 ஆவணப்படத்தில் கூறப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவஞ்சலியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களுடைய முக்கிய நாட்களில் மறக்க முடியாத செயலை செய்து விட்டு நல்லவர் போல் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்,
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இதனை தொடர்ந்து நிகழ்வின் நினைவு பேருரையினை தமிழ் தேசிய அரசியலும் பெண்களும் என்ற தலைப்பில். புளோரிடா சிமியோன் வழங்கியதுடன் அவர் மலையக மக்களுக்கான அங்கிகாரம் இன்னும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து புளோரிடா சிமியோன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.




