குழப்பத்தை உருவாக்கும் கூட்டமைப்பின் அரசியல்: பிள்ளையான் தரப்பு குற்றச்சாட்டு
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தேர்தலிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
காரைதீவில் இன்று (29.09.2024) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழரசுக் கட்சியினர்
“ஏதாவது ஒரு கருப்பொருளை கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழர்களை குழப்புவார்கள். இல்லாவிட்டால் சர்வதேசம் பார்த்துக்கொண்டு இருக்கின்றது வாக்களியுங்கள் என கூறுவார்கள்.
இவ்வாறாக குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி சுமார் 62 வருடங்களாக தமிழர்களின் வாக்குகளை தமிழரசுக் கட்சியினர் பெறுகின்றார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் ஜனாதிபதி தேர்தலில் மாத்திரம் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வாறு தான் அவர்கள் செயற்படுகின்றார்கள்.
ஏதாவது ஒரு கருப்பொருளை கொண்டு வந்து தமிழர்களை குழப்புவார்கள். இல்லாவிட்டால் சர்வதேசம் பார்த்துக்கொண்டு இருக்கின்றது வாக்களியுங்கள் என கூறுவார்கள். இது தவிர அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் கூட நியமித்துவிட்டதாக கூறி இருந்தார்கள்.
இவ்வாறாக குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி சுமார் 62 வருடங்களாக தமிழர்களின் வாக்குகளை தமிழரசுக் கட்சியினர் பெறுகின்றார்கள். தற்போது அம்பாறை மாவட்ட தமிழர்கள் படுகின்ற இன்னல்களை உதாரணமாக கூற முடியும்.
ஆகவே இவ்வாறான விடயங்களை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சியானது சிதறடிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தேர்தலில் சகலரும் ஒன்றாக கேட்போம் என வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள்.
மீண்டும் பொதுக்கட்டமைப்பு
ஒன்றாக சேர்ந்து கேட்பது ஆசனத்தை பெற்றுக்கொள்வது யாருக்காக என்பதை தெளிவாக கேட்க விரும்புகின்றோம். தாங்கள் சார்ந்த சமூகத்திற்காக இவ்வாறான செயற்பாட்டில் இறங்குகின்றோம்.
தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு எதுவும் செய்யாமல் அம்பாறை மாவட்ட மக்களை நடுத்தெருவில் விட்டவர்கள்.
மீண்டும் வந்து பொதுக்கட்டமைப்பில் சேருங்கள். ஒரே சின்னத்தில் கேட்போம் என கூறி எதை செய்யப்போகின்றார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்ற இடத்தில் ஒரு வளைவுகோபுரத்தை நிர்மாணிக்க முடியாத வகையில் தான் இங்கு மக்கள் பிரதிநிதித்துவம் இருந்திருக்கின்றது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |