ஊடகவியலாளர்களுக்கு பதில் கூற மறுத்த பிள்ளையான்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்கூற மறுப்பு தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களை பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பார்வையிட வருகை தந்துள்ளார்.
இதன்போது தனது விஜயம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்கூற சிவனேசத்துரை சந்திரகாந்தன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடும் குற்றச்சாட்டு
இதன்போது அவர், ஊடகங்கள் அங்கேயும், இங்கேயும் சிறுசிறு துண்டுகளாக எடுத்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டு வருகின்றது. தான் பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய விடயங்களை ஊடகங்களில் பிரசுரிக்க முடியும், ஆனால் உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பண்ணையாளர்களுக்கு மத்தியில் ஊடகங்களையும்,ஊடகவியலாளர்களையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளதாகவும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 22 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan
