மட்டக்களப்பில் பொது நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கிய இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்
மட்டக்களப்பு வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தின் வாயிற் கதவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழாவில் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தின் வாயிற் கதவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று(24.06.2024) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஆ.புட்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார்.
ஒன்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள இவ்வாயிற் கதவு அடிக்கல் நடும் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் மற்றும் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
எல்லைப்புறப் பாடசாலைகளுக்கு நிழற் பிரதி எடுக்கும் இயற்திரங்கள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயம், மற்றும் மண்டூர் நவகிரி நகர் வித்தியாலயத்திற்கும் தலா ஒவ்வொரு நிழற்பிரதி எடுக்கும் இயந்திரம் திங்கட்கிழமை (24.04.2024) போரதீவுப் பற்று பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பன்முகப்படுத்தப்பட்ட தலா இரண்டு இலெட்சம் நிதி ஒதுக்கீட்டில் இந்த நிழற்பிரதி எடுக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு உரிய பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்களிடம் உத்தியோக பூர்வமாக வழங்கி வைத்தார். இதன்போது பிரதே செயலக உயர் அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |