முதலமைச்சராகக் களமிறங்குகின்றார் பிள்ளையான்?
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கக்கூடும் என அறியமுடிகின்றது.
'மொட்டு' கூட்டணியின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகவே அவர் களமிறக்கப்படலாம் எனவும், இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் துறப்பார் எனவும் தெரியவருகின்றது.
இது தொடர்பில் பிள்ளையான் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், "கிழக்கு மாகாண மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கட்சி எடுக்கும் தீர்மானத்துக்கு பிள்ளையான் ஒத்திசைவார்" என்று குறிப்பிட்டார்.
அதாவது கட்சி பச்சைக்கொடி காட்டினால் பிள்ளையான் களமிறங்குவார் என்பதே அவரின் கருத்தின் சுருக்கம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிள்ளையானின் கட்சி தனித்துப் போட்டியிட்டது.
எனவே, பிள்ளையான் பதவி துறந்தாலும் அவரின் கட்சியைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்றம் செல்லக்கூடும்.
இதேவேளை, 2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
