சனத் நிஷாந்தவுக்கு இரங்கல் தெரிவித்த பிள்ளையான்
இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இராஜங்க அமைச்சருக்கு இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
என் சக இராஜாங்க அமைச்சரும், நண்பருமான சனத் நிஷாந்த இன்று அதிகாலை இடம் பெற்ற வீதி விபத்தில் அகால மரணமானார் எனும் செய்தி என்னை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எனது சொந்த மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாடு பூராகவும் தன்னாலான பலதரப்பட்ட மக்கள் பணிகளை தனது நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சினூடாக முன்னெடுத்திருந்தார். அதன்காரணமாக பல கிராமங்களுக்கு குடிநீர் வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தார்.
அவ்வாறான ஓர் மக்கள் தலைவனை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri