ரணிலின் பின்னால் அனைவரையும் ஒன்றிணையுமாறு பிள்ளையான் அழைப்பு
குறுகிய காலத்தில் இந்த நாட்டினை மீட்டெடுத்து சிறந்த கட்டமைப்புடன் கொண்டு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பின்னால் அனைவரையும் ஒன்றிணையுமாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பில் நேற்று (12.08.2024) தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அலுவலகத்தை, மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி போன்ற கட்சிகள் இணைந்து திறந்துவைத்துள்ளன.
பிரதம அதிதி
இந்நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய ஆதரவு வழங்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து கொண்டுசெல்லும் அலுவலகமாகவும் இது செயற்படவுள்ளதாக இங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன், ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுதர்சன், ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட மகளிர் இணைப்பாளளர் சசிகலா ஜெயதேவா உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
