கதிர்காமத்தை சென்றடைந்த பாதயாத்திரைகள்!
கதிர்காமத்துக்கான பாதயாத்திரைகள் 5 தினங்களாக காட்டுவழியாக பயணத்தை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (25) கதிகாமத்தை சென்றடைந்தனர்.
கதிர்காம முருகப் பெருமான் ஆலய கொடியேற்றத்தையிட்டு பக்தர்கள் நேத்திக்கடன்களை வைத்து பாதயாத்திரைகள் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பிப்பார்கள்.
கதிர்காம முருகப் பெருமானுக்கு நேர்த்திகடன் வைத்து பாதயாத்திரைகள் செல்லும் பகத்தர்கள் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து சுமார் 850 கிலோமீற்றர் தூரம் சுமார் 45 நாட்கள் பாதையாத்திரையாக கதிர்காமத்தை சென்று சென்று நேத்திகடனை முடித்து ஆலயத்தை தரிசிப்பது வழமை.
பக்தர்கள் கவலை
இந்த வகையில் யாழ். செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மாதம் ஆரம்பித்த பாதை யாத்திரை குழுவினர் கிழக்கு மாகாணம் பாணமை உகந்தமலை முருகன் ஆலையத்தை கடந்த 19 திகதி சென்றடைந்தனர்.
உகந்தயில் இருந்து கதிர்காமத்துக்கான காட்டுவழிபாதை கடந்த 20 திகதி வெள்ளிக்கிழமை சம்பிராய பூர்வமாக திறக்கப்பட்டு 5 தினங்களாக காட்டுவழியாக ஆரயிக்கணக்காண பக்தர்கள் பாதயாத்திரையாக இன்று வியாழக்கிழமை (26) கதிர்காம முருகன் ஆலயத்தை சென்றடைந்தனர்.
இதேவேளை காட்டுவழிபாதை எதிர்வரும் 4ம் திகதி மூடப்படும் என்பதுடன் காட்டுவழி பாதையில் பாதயாத்திரைகள் குடிப்பதற்காக தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமத்தை மேற்கொண்டதாகவும் இவ்வாறான நிலை ஒருபோதும் இடம்பெறவில்லை இம்முறை இடம்பெற்றதாகவும் இதற்கு பொறுப்பான அதிகாரிகள் கவனம்செலுத்தத வேண்டும் என் பாதயாத்திரை பக்தர்கள் கடும் கவலை தெரிவித்தனர்.









நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
