மட்டக்களப்பில் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு கழிவு அகற்றும் உழவு இயந்திரத்தில் வந்த தவிசாளர்கள்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு செல்வதற்கு தமக்கான வாகனம் இல்லாததால் அதனை வழங்க கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் கழிவு அகற்றும் உழவு இயந்திரத்தில் கச்சேரிக்கு இன்று (16) பிரயாணித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இந்த வாகனங்களை பிரதேச சபைகள் காலம் முடிவுற்று கலைக்கப்பட்டதையடுத்து பிரதேச செயலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் பிரதேச சபைகளுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற புதிய ஆளுநர் பாவிக்காத வாகனங்கள் தொடர்பாக அறியத்தரும்படி பிரதேச சபைகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதேச சபை வாகனங்களை ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தவிசாளர்களுக்கான வாகனம்
இதனையடுத்து உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் இடம்பெற்று பிரதேச சபைகளின் தவிசாளர்கள் நியமிக்கப்பட்டு பிரதேச சபை தவிசாளர்கள் ஆட்சியை பெறுப்பேற்றதையடுத்து மீண்டும் வாகங்களை தேவைக்கு ஏற்ப வழங்குவதற்கு ஆளுநர் முன்னெடுத்துள்ளார்.
இருந்தபோதும் பிரதேச சபை தவிசாளர்களுக்கான வாகனம் இல்லாததால் அவர்கள் தமது சேவையைச் செய்ய முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.
எனவே பிரதேச சபைகளில் இருந்து எடுத்து சென்ற வாகனங்களை மீண்டும் வழங்குமாறும் கோரி செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளீதரன், வாழைச்சேனை பிரதேச சபையின் சு.சுதாகரன் ஆகிய இரு பிரதேச சபைகளின் தவிசாளர்களும் இன்று இடம்பெற இருந்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக செங்கலடி பிரதேச சபையின் கழவு அகற்றும் உழவு இயந்திரத்தில் 16 கிலோ மீற்றர் தூரம் பிரயாணித்து மட்டக்களப்பு கச்சேரிக்கு வந்தடைந்தனர்.
கழிவு அகற்றும் வாகனம்
இந்த உழவு இயந்திரத்தை கச்சேரி வளாகத்தில் உட்செல்ல விடாது பொலிஸார் தடுத்து நிறுத்தி சில நிமிடங்களில் உட்செல்ல அனுமதித்தனர்.
இதேவேளை இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவிக்கையில், நாங்கள் ஒருபோதும் பிரதேச சபைகளின் தவிசாளர்களின் வாகனங்களை பெறவில்லை இவர்கள் ஊடகங்களுக்கு படம் காட்டுவதற்காக உழவு இயந்திரத்தில் வந்துள்ளனர்.
அத்துடன் இவர்கள் கழிவு அகற்றும் வாகனத்தை அந்த வேலைக்கு செல்ல விடாது செய்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 23 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
