கதிர்காமத்தை சென்றடைந்த பாதையாத்திரை குழு
அம்பாறை - உகந்தையில் இருந்து ஆரம்பித்த கதிர்காமத்துக்கான பாதையாத்திரிகள் குழுவினர் 5 நாட்கள் காட்டுவழியாக நடந்து நேற்று வெள்ளிக்கிழமை (05) கதிர்காமகந்தன் ஆலையத்தை சென்றடைந்துள்ளனர்.
கதிர்காமகந்தன் ஆலய வருடாந்த கொடியேற்றத்தையிட்டு பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு செல்லவுள்ளனர்.
அங்கிருந்து திருகோணமலை ஆலயங்களை தரிசித்து விட்டு அங்கிருந்து வெருகலம்பதி முருகன் ஆலயம் சென்று வாகரை ஊடாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பயணிக்கவுள்ளனர்.
உகந்தை காட்டுவழி பாதை
அதனைத் தொடர்ந்து, திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், உகந்தை முருகன் ஆலயம், கபிலவத்தை முருகன், வைரவர் ஆலயங்கள், செல்லக்கதிர்காமம் ஆலயம் அகிய கோவில்களுக்கும் செல்லவுள்ளனர்.
இதனடிப்படையில் கதிர்காமத்துக்கான உகந்தை காட்டுவழி பாதை கடந்த 30ஆம் திகதி சமயசடங்குகளுடன் திறக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri