யாத்திரிகளுடன் சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து: பொலிஸார் வெளியிட்ட தகவல்
கம்பளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்தொன்று இன்று (16.11.2025) காலை கல்குளம் பிரதேசத்தில் வைத்து தீப்பற்றி எரிந்துள்ளது.
கண்டி-யாழ்ப்பாணம் A9 வீதியில் உள்ள கல்குளம் கட்டுமான இயந்திர கல்லூரிக்கு முன்னால் குறித்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டபோது பேருந்தில் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட சுமார் 12 பேர் இருந்ததாகவும், அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடமைகள் தீயில் எரிந்து நாசம்
இருப்பினும், தீ விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதுடன்,சாரதியும், உதவியாளரும் பேருந்தை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக இறக்கியுள்ளனர்.
பக்தர்களின் அலறல் சத்தம் கேட்டு பகுதிவாசிகளும், பொலிஸாரும் இணைந்து பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், பேருந்தில் இருந்த பயணிகளின் பொருட்கள் மற்றும் உடமைகள் தீயில் எரிந்து நாசமாகிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam