குடிபோதையில் பிரதம பௌத்த பிக்கு மேற்கொண்ட சம்பவம்!
அண்மைக் காலமாக பௌத்த பிக்குகள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இறுதியாக நுகேகொடையில் பெண் ஒருவருடன் சாதாரண ஆடையணிந்து சென்ற பௌத்த பிக்கு ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறைக்கு ஒப்படைத்த சம்பவமும் பதிவாகியிருந்தமை குறிப்பி்டத்தக்கது.
இந்தநிலையில் மினுவாங்கொட ரஜமஹா விஹாரையின் பிரதமகுருவை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிரதம மதகுரு, அண்மையில், விஹாரையின் உதவியாளர் ஒருவரை குடிபோதையில் தாக்கியதாக குற்றம் சுமத்திய நிலையிலேயே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விஹாரையில் தங்கியிருந்து நோயுற்ற பிக்கு ஒருவரை பராமரித்துக்கொண்டிருந்த ஒருவரையே பிரதம குரு, இரும்புக்கம்பியால் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து தாக்கப்பட்டவர் வழங்கிய முறைப்பாட்டை விசாரிக்க வந்த காவல்துறையினருக்கு குடிபோதையில் இருந்து பிரதமகுரு, இடையூறை ஏற்படுத்தியுள்ளார்.
அத்துடன் காவல்துறையின் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி, திட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காவல்துறையினரின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட மினுவாங்கொட நீதிவான் கேவர சமரதிவாகர, பிரதம பிக்குவை, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்
இதற்கிடையில் குறித்த பிக்குவை கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய காவல்துறை பொறுப்பதிகாரி, பேலியகொட காவல்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த தகவலை காவல்துறையின் பேச்சாளர் உறுதிப்படுத்தவில்லை.





தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
