யாழில் முச்சக்கரவண்டி சாரதிகள் நடத்திய தாக்குதல் : விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பிக்மீ (pickme) சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புக்கமைய யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை(17.11.2023) பலாலி வீதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோது பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக பாதிக்கப்பட்ட பிக்மீ (pickme) சாரதி கவலை வெளியிட்டதுடன் பிக்மீ (pickme) நிறுவனத்திற்கும் தகவலளித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நிறுவனம் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய முறைப்பாட்டின் கீழ் குறிப்பிட்ட சாரதி நேற்றையதினம் (20.11.2023) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு முறைப்பாடு பெறப்பட்டது.
இதனடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க Cineulagam
