பிரித்தானியாவில் அதிகரிக்கும் அச்சுறுத்தல்.. ஈரானால் தொடர் பதற்றம்!
பிரித்தானிய மக்கள் மீது கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஈரானால் நடத்தப்படும் உடல் ரீதியான தாக்குதல்களினால் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய உளவுத்துறை இது தொடர்பில் அறிக்கை ஒன்றில் தகவல்களை குறிப்பிட்டுள்ளது.
ஈரான், பிரித்தானிய மக்களுக்கு பரந்த அளவிலான, தொடர்ச்சியான மற்றும் கணிக்க முடியாத அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
படுகொலை முயற்சிகள்
மேலும், ஈரானின் உளவுத்துறை சேவைகள் பெரும்பாலும் மூன்றாம் தரப்பு முகவர்கள் மூலம் பிரித்தானியாவிற்குள் படுகொலை முயற்சிகள் முன்னெடுப்பதற்கும், பிரித்தானியாவிலிருந்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் தயாராகவும் திறமையாகவும் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஆகஸ்ட் 2023வரை பிரித்தானிய குடிமக்கள் அல்லது பிரித்தானியாவை சேர்ந்த நபர்களுக்கு எதிராக 15 கொலைகள் அல்லது கடத்தல் முயற்சிகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், ஈரானின் செயல்பாடுகள் ரஷ்யா மற்றும் சீனாவை விட குறைவான திட்டமிடல் ரீதியாகவும் சிறிய அளவிலும் இருப்பதாகத் தெரிகிறது. ஈரான் பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்புக்கு பரந்த அளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, இதை குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய தடைகள்
அதேவேளை, இந்த அச்சுறுத்தல் பெரும்பாலும் அதிருப்தியாளர்கள் மற்றும் ஈரான் ஆட்சிக்கு எதிரான பிறரை மையமாகக் கொண்டிருந்தாலும், பிரித்தானியாவில் யூத மற்றும் இஸ்ரேலிய நலன்களுக்கு அதிகரித்த அச்சுறுத்தல் இருப்பதாகவும் குழு கூறுகிறது.
அறிக்கைக்கு பதிலளித்துள்ள பிரித்தானிய அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர், தேசிய பாதுகாப்பைப் உறுதிபடுத்த தேவையான இடங்களில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக மேலும், தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம், மொத்த தடைகளின் எண்ணிக்கையை 450ஆகக் கொண்டு வந்துள்ளோம் என்றார்.
ஆனால், பிரித்தானிய உளவுத்துறை அறிக்கையை நிராகரித்துள்ள ஈரான், அந்த அறிக்கை ஆதாரமற்றது, அரசியல் நோக்கம் கொண்டது மற்றும் விரோதமானது என குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
