யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி டிப்ளோமா மாணவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை
யாழ்ப்பாண பல்கலைக்கழக உடற்கல்வி துறையின் 12 ஆவது அணியில் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்கள் தமக்கான பணி நியமனங்களை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்(Douglas Devananda) கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சரின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு நேற்று (16.05.2024) சென்றிருந்த குறித்த கற்கைநெறியாளர்கள் தமது எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் அமைச்சருக்கு தெளிவுபடுத்தி கலந்துரையாடியிருந்தனர்.
நிரந்தர நியமனங்கள்
இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில், தாம் உடற்கல்வி துறையில் ஒவ்வொரு துறை சார் விளையாட்டுக்களில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தற்போது யாழ். மாவட்டத்தில் பல பாடசாலைகளில் உடற்கல்வி துறை துரிதமாக வளர்ச்சியடைந்துள்ள நிலையிலும் அதற்கான ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர்கள் போதியளவு இன்மை காணப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த வெற்றிடங்களுக்கு தமக்கான நியமனங்களை பெற்றுத்தருவதற்கு ஏற்பாடு செய்து தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த கற்கையாளர்களின் கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர், வரும் வாரம் யாழ்ப்பாணத்தித்கு ஜனாதிபதி வருகைதரவுள்ள நிலையில் அவ்விடயம் குறித்து அவரிடம் நேரில் பிரஸ்தாபிப்பதற்கு ஏற்பாடு செய்துதருவதாக கூறியிருந்ததுடன், நிரந்தர நியமனங்கள் கிடைக்கும்வரை பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளது மாணவர்களின் விளையாட்டு துறையின் மேம்பாட்டுக்கு தன்னார்வ ரீதியில் பங்களிப்பு செய்து உங்கள் திறமையுடன் மாணவர்களின் ஆற்றலையும் மேம்படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
