பரபரப்பான நிலையிலும் இலங்கை மக்களின் கவனத்தை ஈர்த்த சம்பவம்
இலங்கை முழுவதும் மக்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் இணையத்தில் புகைப்படம் ஒன்ற பிரபல்யமடைந்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது தேரர் ஒருவரை மழையில் நனைய விடாமல் முஸ்லிம் மாணவி ஒருவர் புத்தகத்தினால் அவரை மறைத்துக் கொண்டுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டக்களத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிய நிலையில் பலரும் அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இன மத பேதமின்றி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதனை இந்த புகைப்படம் உணர்த்துவதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தால் குறித்த முஸ்லிம் மாணவி மீது மரியாதை ஏற்பட்டுள்ளதாக பலரும் இணையத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
“நீங்கள் உங்கள் மதம் அல்லது இனத்தை முன்வைக்கவில்லை. இந்த நாட்டின் கௌரவமான குடிமகன் என்ற உங்கள் மதிப்பை இது காட்டுகிறது.
இதுதான் நம் நாட்டுக்கு தேவை. உங்களுக்கு வாழ்த்துக்கள்” என இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.