கத்தார் புகைப்பட போட்டியில் இலங்கை இளைஞரின் புகைப்படம் தெரிவு - குவியும் பாராட்டுக்கள் (PHOTOS)
கத்தாரில் இடம்பெறும் "FRAMES SEASON 5" புகைப்பட போட்டியில் இலங்கை இளைஞரின் புகைப்படமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதை சேர்ந்த ஜே. எம். பாஸிதின் என்ற இளைஞரின் புகைப்படமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இப்புகைப்பட போட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், இதில் தெரிவு செய்யப்பட்ட முப்பது புகைப்படங்கள் ஆகஸ்ட் 17 தொடக்கம் ஆகஸ்ட் 30 வரை கத்தார் அபு ஹமூரில் உள்ள சஃபாரி மாலில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பரிசு விபரம்
இந்த கண்காட்சியில் புகைப்படங்களுக்கு மக்கள் வாக்களித்து மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது.

முதலாவது வெற்றியாளருக்கு 3000 ரியால், இரண்டாவது வெற்றியாளருக்கு 2000 ரியால், மூன்றாவது வெற்றியாளருக்கு 1000 ரியால் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என இரண்டு பிரிவுகளில் பரிசு வழங்கப்படவுள்ளதுடன், பல நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்குப்பற்றியுள்ளனர்.
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri