கொழும்பு சிறைச்சாலையில் மீட்கப்பட்ட பாரியளவு அலைபேசிகள்
கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் (CRP) கடந்த 2 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சிறையினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள், அலைபேசிகள் மற்றும் பல சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கையை சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இணைந்து இரவு 10 மணியளவில் முன்னெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனை "எச் வாஸ்" என அறியப்படும் பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு சுமார் 50 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள்
சோதனையின் போது பெருமளவிலான ஐஸ், ஹெரோயின், கொக்கெயின் போன்ற போதைப்பொருட்கள், இரண்டு ஸ்மார்ட் அலைபேசிகள் (Apple வகை உட்பட), சாதாரண கைபேசிகள் சுமார் 20, மொபைல் சார்ஜர்கள் 26, பேட்டரிகள் 15, சிகரெட்டுகள் 15, மற்றும் 15,280 ரூபா மேற்பட்ட பணத்தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொதுத் தகவல் பிரிவின் அதிகாரிகள் ஸ்கேன் கருவிகளைப் பயன்படுத்தி மேற்கொண்ட சோதனையில், கைதிகள் தங்கும் அறைகள், கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் நுட்பமாக பதுக்கப்பட்டிருந்த இந்த தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.
இக்கைதிகள், சிறைக்குள்ளே போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சிறைச்சாலை திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

குடும்பத்துடன் நடிகர் அஜித் தீபாவளியை எப்படி கொண்டாடினார் தெரியுமா.. இதோ புகைப்படம் பாருங்க Cineulagam

துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
