பிரபல வெளிநாட்டு நிறுவனமொன்றின் திடீர் முடிவினால் வேலையை இழக்கும் 4000 ஊழியர்கள்
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல பிலிப்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் கிளைகளை நிறுவியுள்ளதுடன், சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிறுவனங்களில் இருந்து 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
எலெக்ட்ரானிக்ஸ் , மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்து வரும் பிலிப்ஸ் நிறுவனத்தின் சுவாசக்கருவிகளில் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டதால் சுமார் 1.3 பில்லியன் யூரோ இழப்பு ஏற்பட்டுள்ளது.
பணவீக்க அழுத்தங்கள்
இதேவேளை, மூன்றாவது காலாண்டில் பணவீக்க அழுத்தங்கள், சீனாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவற்றால் பிலிப்ஸின் செயல்திறன் மற்றும் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக சுமார் 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக பிலிப்ஸ் சிஇஓ ராய் ஜேக்கப்ஸ் அறிவித்துள்ளார்.
உற்பத்தித்திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக சுமார் 4,000 ஊழியர்களை குறைக்க உள்ளோம், இது கடினமான அதேசமயம் அவசியமான முடிவு என சிஇஓ தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
