வொஷிங்டனுடன் பிலிப்பைன்ஸ் பேச்சுவார்த்தை
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ள நாடுகளிடம் இருந்து மசகு எண்ணெயைப் இறக்குமதி செய்வதற்குத் தேவையான அனுமதியைப் பெற, பிலிப்பைன்ஸ் அரசு வொஷிங்டனுடன் இணைந்து பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி விலை உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளிக்கும் ஒரு பகுதியாக பிலிப்பைன்ஸ் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
பிலிப்பைன்ஸ் எரிபொருள் தேவையை
பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை செயலாளர் என்ரிக் மனாலோ இது குறித்துக் கூறுகையில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய மலிவான விலையில் எண்ணெய் கிடைப்பது அவசியம் என்றும், அதற்காகவே இந்த இராஜதந்திர முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் விளக்கினார்.
தற்போது ஈரான் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகள் மீது அமெரிக்கா கடுமையான வர்த்தகத் தடைகளை விதித்துள்ளது.

இந்த நாடுகளிடம் இருந்து எண்ணெய் வாங்குவது பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அமெரிக்காவிடம் இருந்து சிறப்பு விலக்கு கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றங்களால் எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் தனது பொருளாதாரத்தைச் சீராகக் கொண்டு செல்ல மாற்று வழிகளைத் தேடி வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், பிலிப்பைன்ஸ் தனது எரிபொருள் தேவையை மலிவான விலையில் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.