இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுட்ரஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று நிலைமை முடிவுக்கு வந்ததும் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த திங்கட்கிழமை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய போது, நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
பிலிப்பைன்ஸ் இலங்கை நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளுக்கு இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு தொடர்ச்சியாக பிலிப்பைன்ஸ் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு நன்றி பாராட்டுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.





இந்திய விமானப்படைக்கு போர் விமானங்கள் தேவை - அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை News Lankasri
