நாடுகளுக்கிடையிலான பயணத்தடையை நீடித்தது பிலிப்பைன்ஸ்
இலங்கை உட்பட்ட மேலும் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத்தடையை பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நீடித்துள்ளது.
கோவிட் வைரஸின் தீவிரமாக பரவக்கூடிய "டெல்டா" மாறுபாடு காரணமாக ஐக்கிய அரபு இராச்சியம் , இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜூலை 15 வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் பேச்சாளர் ஹரி ரோக் தெரிவித்துள்ளார்.
அரச தொலைக்காட்சியான பி.டி.வி 4 க்கு அளித்த செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா மாறுபாடு இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இது ஏனைய தொற்றுகளைக் காட்டிலும் 60% அதிகமாக பரவக்கூடியது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாகவே குறித்த நாடுகளின் பயணிகளுக்கான பயண தடையை ஜூலை 15வரை நீடித்துள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த நாடுகளின் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நாளை ஜூன் 30இல் முடிவடையவுள்ள நிலையிலேயே புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.