கோவிட் பரவல் அச்சம்! உள்வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ள பிலிப்பைன்ஸ்
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளிலிருந்து உள்வரும் அனைத்து பயணிகளுக்கும் ஜூன் 30 வரை, பிலிப்பைன்ஸ் தடை விதித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் பேச்சாளர் ஹரி ரோக் இதனை தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டூர்ட்டே, நாட்டில் தொற்று மாறுபாடு பரவாமல் தடுக்க பயண கட்டுப்பாடுகளை நீடிக்க ஒப்புதல் அளித்ததாக பேச்சாளரை கோடிட்டு சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் ஆரம்பத்தில் ஏப்ரல் 29 முதல் இந்தியா மீது பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது.
மே 7 முதல் பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களைச் சேர்க்கும் தடையை அது விரிவுபடுத்தியது.
மே 15 அன்று ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பயணிகளின் வருகையை
பிலிப்பைன்ஸ் தடை செய்தது.
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri