அரசாங்கத்தின் மீது அதிருப்தி வெளியிடும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
கோவிட் காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு குறித்து பொதுச் சுகாதார பரிசோதர்கள் கூடுதல் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தியன் செயலாளர் எம்.பாலசூரிய இதனை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கிரமமான திட்டங்களை நடைமுறைப்படுத்தாது சில அறிவிப்புக்களை மேற்கொள்வதனால் தமக்கு பெரும் சிக்கல்கள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சடலங்களை அடக்கம் செய்வது குறித்த உரிய ஆலோசனை வழிகாட்டல்களை வெளியிடாது, சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் சடலங்களை அடக்கம் செய்யும் கிரமான விதிமுறைகளை அறிவிக்காது அனுமதி வழங்கினால் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை வழிகாட்டல்கள் பற்றி அறிவிக்கப்படாத காரணத்தினால் கோவிட் சடலங்களை எவ்வாறு அடக்கம் செய்வது என்பது குறித்து பொதுமக்களை அறிவுறுத்த தம்மால் முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
