மூட்டு நோய்க்கு பதிலாக புற்றுநோய் மருந்தை வழங்கிய மருந்தகம்! நான்கு குழந்தைகளின் தாயாருக்கு நேர்ந்த கதி
உடவளவையைச் சேர்ந்த நான்கு குழந்தைகளின் தாயார் ஒருவருக்கு, மூட்டு நோய்க்கு நிபுணர் பரிந்துரைத்த மருந்திற்குப் பதிலாக, மருந்தகத்தில் இருந்து புற்றுநோய் மருந்தை வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
கே.ஜி. பிரியாணி சந்திரமாலி என்ற அந்தப் பெண், தனது கடுமையான நோய் காரணமாக எம்பிலிபிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் பத்து நாட்கள் உள்நோயாளி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.
மேலும் மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பு மருத்துவமனைக்கும் வருகைத்தந்துள்ளார்.
தனியார் மருத்துவமனை
இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கருத்து வெளியிடுகையில்,
மூட்டு நோய்க்காக எம்பிலிபிட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு நிபுணரிடமிருந்து பெறப்பட்ட மருந்துக்கான பரிந்துரை சீட்டு, உடவளவையில் உள்ள ஒரு மருந்தகத்திற்கு வழங்கப்பட்டது. அங்கு தொடர்ந்து மருந்துகள் பெறப்பட்டது.
மருந்தகம் பரிந்துரைக்கும் மருந்தை உட்கொண்ட பிறகு, தனது மனைவிக்கு வயிறு மற்றும் மார்பு வீக்கம், வாய் புண்கள், மங்கலான பார்வை மற்றும் பசியின்மை போன்ற பல அறிகுறிகள் ஏற்பட்டன.
இதன்பின்னர் அவர் எம்பிலிப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , நோயைக் கண்டறிவது மருத்துவர்களுக்கு கடினமாக இருந்தது.
இதனை தொடர்ந்து பெறப்பட்ட மருந்துகளை பரிசோதித்தபோது இந்த தவறு தெரியவந்தது.
புற்றுநோய் மருந்து
வாரத்திற்கு 3 மில்லிகிராம் என்ற அளவில் புற்றுநோய் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்தில் 40 மில்லிகிராம் (நான்கு 10 மில்லிகிராம் மாத்திரைகள்) பெற்றுக்கொள்ள மருந்தகம் அறிவுறுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த அறிவுறுத்தல்களின்படி, 42 உயர் செரிமானம் மாத்திரைகளை உட்கொண்டதன் மூலம் அவர் இந்த மோசமான நிலையை அடைந்துள்ளதாக சிறப்பு மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்” என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக உடவலவை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், மருந்தகம் தனது தவறை ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் குடும்பத்தினருக்கு வேறு எந்த நேர்மறையான பதிலும் அளிக்கவில்லை என்றும் கணவர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
