பைஸரின் கோவிட் மாத்திரைக்கு அமெரிக்காவில் அங்கீகாரம்
கடுமையான நோய் அபாயத்தில் உள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான Pfizer இன் கோவிட் வைரஸ் எதிர்ப்பு மாத்திரைக்கு அமெரிக்கா அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வீட்டிலேயே சிகிச்சை பெறும் மற்றும் வேகமாக பரவி வரும் Omicronக்கு எதிரான முதலாவது வாய் மூல மாத்திரையாக இது கருதப்படுகிறது.
Paxlovid, நிறுவனத்தின் மருத்துவ பரிசோதனையின் தரவுகளின்படி, கடுமையான நோயின் காரணமாக அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளின் மருத்துவமனை மற்றும் இறப்புகளைத் தடுப்பதில் கிட்டத்தட்ட 90% பயன்பாட்டை இது தரும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த மாத்திரைகளின் சுமார் 265ஆயிரம் தொகை, எதிர்வரும் ஜனவரியில் அமெரிக்க அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது
இதனையடுத்து அடுத்த மாதங்களில், அவற்றின் விநியோகம் அதிகரிக்கும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசாங்கம் கட்டளை பிறப்பித்த 10 மில்லியன் தொகையான இந்த மாத்திரைகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத்திரைகள் ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.