பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் 80 கோடி ரூபா இழப்பு: அர்ஜுனா - தம்மிகவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சரான அர்ஜுன ரணதுங்க மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சுமார் 80 கோடி ரூபா நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சரீரப் பிணை
இதனைத் தொடர்ந்து, இருவரையும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

உள்நாட்டு டெண்டர்களை எவ்வித விதிமுறைகளுமின்றி தன்னிச்சையான முறையில் கையாண்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தை விலையை விட அதிக விலைக்கு ஒப்பந்தங்களை அனுமதித்ததன் மூலம், அரசுக்குச் சுமார் 80 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையைத் தாக்கல்
இது தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்த சட்டமா அதிபர் திணைக்களம், போதிய சான்றுகளின் அடிப்படையில் இருவருக்கும் எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

எரிபொருள் விநியோகம் மற்றும் கொள்வனவு நடைமுறைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகளின் முடிவில், இந்தப் பாரிய நிதி மோசடி அம்பலமாகியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான முன் விசாரணையை எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி நடத்துவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அன்றைய தினம் வழக்கை மீண்டும் அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
குக் வித் கோமாளி 7வது சீசனில் 4வது நடுவராக இணைந்துள்ள பிரபல நடிகை... செம கலக்கல் புரொமோ, யாரு பாருங்க Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri