இலங்கையின் 450 எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் வெளியான தகவல்
உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களுக்கு,நாட்டிலுள்ள 450 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் உள்ள 1197 அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 450 நிலையங்கள் தற்போது இவ்வாறான சேவைகளை வழங்கும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரியவருகிறது.
இந்தியாவின் மூன்று நிறுவனங்கள்
150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யவும், சேமிக்கவும் மற்றும் விநியோகிக்கவும் அனுமதி வழங்கப்படவுள்ளது.
தற்போது செயல்படும் 450 நிரப்பு நிலையங்களும் இதற்காக ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் மூன்று நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஷெல் மற்றும் செனோபெக் ஆகியவை இந்த நாட்டில் முதலீடு செய்ய வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.