வடமாகணத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இணையம்(Photos)
வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் இயங்கும் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் வடமாகாண எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இணையமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
யாழ்பாணம் நூலக கேட்போர் கூடத்தில் நேற்று(17) காலை நடை பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் இந்த இணையத்துக்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இணையத்தின் தலைவராக பருத்தித்துறை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் திரு ஜெய்சங்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் செயலாளராக நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் திரு சு.சுதர்சன், பொருளாளராக அளவெட்டி மல்லாகம் கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சார்பில் கூட்டுறவு சங்க தலைவர் திரு கணேசலிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து உபதலைவர், உப செயலாளர் ஆகியோர் ஏனைய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டதோடு நிர்வாக உறுப்பினர்களாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒவ்வொரு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துக்கள் தெரிவிப்பு
எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கூட்டிணைவு செயற்பாட்டின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் எரிபொருள் விநியோகிப்பது தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இந்த இணையத்தின் காத்திரமான செயற்பாடுகளை அவதானிக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மற்றும் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோர் விருந்தினர்களாக வந்துள்ளனர்.