ரணிலும் எதுவும் செய்யவில்லை: அனைவரும் நாட்டிலிருந்து சென்றால் என்ன செய்வீர்கள்..! அரசாங்கத்திடம் கேள்வி (Video)
நாம் இந்த நாட்டில் இருப்பதா செல்வதா என பெற்றோலுக்காக அதிகாலை முதல் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு - அளுத்மாவத்தை பெற்றோல் நிலையத்தில் இன்று காத்திருக்கும் மக்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், காலை நான்கு மணிக்கு வந்தோம். இதுவரையில் எமக்கு பெற்றோல் கிடைக்கவில்லை.
ரணில் வந்திருக்கிறார் ஆனால் எதுவும் செய்யவில்லை. இந்த நிலைமை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும். நாம் இந்த நாட்டில் இருப்பதா செல்வதா?
கடவுச்சீட்டுக்களை செய்து கொண்டு அனைவரும் நாட்டிலிருந்து சென்றால் என்ன செய்வீர்கள்?
தயவு செய்து இந்த பிரச்சினைக்கு முடிவினை கொண்டு வாருங்கள். வேலையிலிருந்து விடுமுறை எடுத்து வந்து நாங்கள் பெற்றோல் வாங்குகிறோம்.
இதனை பார்த்துக் கொண்டு அரசாங்கம் என்ன செய்கிறது என கேள்வியெழுப்பியுள்ளனர்.



ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 19 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan