மீண்டும் நெருக்கடி! இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
மேலும், வார இறுதி நாளான இன்றும் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ளார்.
நிலைமை தீவிரம்
நேற்று முன்தினம் முதல் நாட்டில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
எனினும், நேற்றையதினம் இரவுடன் எரிபொருள் வரிசை ஓரளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எரிபொருளுக்கான வரிசை மீண்டும் ஏற்பட்டுள்ளது என்ற பிரசாரத்தை அறிந்து கொண்ட அதிகளவான மக்கள் எரிபொருள் நிலையங்களை நோக்கி படையெடுத்ததால் நிலைமை இன்னும் தீவிரமடைந்தது.
இதேவேளை, கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது உரையாற்றிய, இலங்கை பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர், தங்களுடை பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டில் எரிபொருளுக்கான பற்றாக்குறை அதிகமாக இருக்கும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னர் காலத்து இரும்பு உள்ளாடை: ராணிகளின் ரகசியம் உண்மையா? வைரல் வீடியோவின் அதிர்ச்சி பின்னணி! News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
