திருகோணமலையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்(video)
திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்தின் வாயிலை மறித்து , தமக்கான டீசலை பெற்று தருமாறு கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது இன்று(17) காலை இடம்பெற்றுள்ளது.
ஆர்பாட்டத்தின் போது இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துக்களை, பேருந்து தரிப்பிடத்துக்குள் செல்லவிடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களிடம் முன்வைக்கப்பட்ட தீர்வு
இது தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் இலங்கை போக்குவரத்து சபையுடன் கலந்துரையாடி, 2500 லீட்டர் டீசலை தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்குவதாக கூறியதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றுள்ளனர்.
இந்த போராட்டத்தினால் தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள்








