தேசிய எரிபொருள் அட்டை! அமைச்சரின் புதிய அறிவிப்பு
தேசிய எரிபொருள் அட்டை அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
QR குறியீடு வழங்கப்படும்
குறித்த இணையத்தளத்தில் பதிவு செய்யப்படும் தகவல்கள் சரிபார்க்கப்பட்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் ஒவ்வொரு வாகனத்திற்கும் குறிப்பிட்ட QR குறியீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Update - National Fuel Pass will be upgraded in the next few days to give an option for Businesses\Organizations that operate multiple vehicles to register All their vehicles with the Business Registration Number. Each vehicle will be given a specific QR code after verification.
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 17, 2022
இதேவேளை தேசிய எரிபொருள் அனுமதி சீட்டுக்கான பதிவு முடியும் வரை இறக்கப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (16) தெரிவித்தார்.
மேலும், 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளது.
கப்பலில் டீசல் இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய சேமிப்பு முனையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜூலை 18 அல்லது 19 ஆம் திகதி பெட்ரோல் கப்பல் நாட்டை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று எரிபொருள் ஏற்றுமதிக்கும் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.