தற்போதைய விலையை விட குறைந்த விலையில் எரிபொருள்! எரிசக்தி அமைச்சின் அறிவிப்பு
நாட்டினுள் தற்போதைய விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்க சில நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்பாடுகள்
இது குறித்து மேலும் கூறுகையில், நாட்டில் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த வருடம் ஜூன் மாதம் முதல் தொழில்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளன.

குறித்த மூன்று நிறுவனங்களுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடல் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் நிறைவுறுத்தப்படும்.
தற்போதைய விலையை விட குறைந்த விலையில் அந்த நிறுவனங்களுக்கு நாட்டினுள் எரிபொருளை விநியோகிக்க வாய்ப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
சீனாவின் - சினொபெக், அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

20 வருடங்களுக்கு நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு, களஞ்சியப்படுத்துவதற்கு மற்றும் விநியோகிப்பதற்கு குறித்த நிறுவனங்களுக்கும் அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri