மத்திய கிழக்கில் பதற்றம் - எரிபொருள் சேமிக்கும் மக்கள்: பொலிஸ் நிலையங்களுக்கு அதிரடி அறிவுறுத்தல்
இலங்கையில் எரிபொருளை போத்தல் மற்றும் கொள்கலன்களில் எரிபொருளை வழங்காமல் இருக்க எரிபொருள் நிலைய மேலாண்மைத்துவத்துடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது உருவாகியுள்ள பாதகமான சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் முறையற்ற விதத்தில் எரிபொருளை சேமித்து வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
எரிபொருள் சேகரிப்பு
நாட்டில் தேவையான அளவில் எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் தேவையற்ற முறையில் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இருப்பினும், சில தரப்பினர் திட்டமிடப்பட்ட வகையில் போத்தல்கள் அல்லது பிற வெளிப்புறக் கொள்கலன்களில் எரிபொருளை சேகரித்து வருகின்றனர்.

இத்தகைய செயல்களைத் தடுக்க மீன்பிடிப் படகுகள், தொழிற்சாலைகள், பணியிடங்கள், விவசாயம் மற்றும் வீட்டுத் தேவைகள் ஆகியவற்றிற்குத் தவிர மீண்டும் அறிவிப்பு வழங்கப்படும் வரை, கொல்களன்கள், போத்தல் அல்லது வேறு பொருட்களில் எரிபொருளை வழங்காமல் இருப்பதற்கு எரிபொருள் நிலைய மேலாண்மைத்துவத்துடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தேவையற்ற முறையில் எரிபொருளை சேகரித்து கையிருப்பில் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் எரிபொருள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு பொய்யான தகவல்களைப் பரப்பும் நபர்கள் அல்லது குழுக்கள் குறித்து விசாரணை செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பிரிவு எச்சரித்துள்ளது.
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam