வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் மனு கையளிப்பு(Photos)
இலங்கை விவகாரத்தில் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு, வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் மக்கள் பணிமனை அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெனிவாவில் தற்போது ஜக்கிய நாடுகள் சபையின் 51ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடர் இடம்பெற்று வருகின்றது.
இந்த கூட்டத் தொடரின் இறுதி தீர்மான அறிக்கையில், இலங்கையின் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பான கோரிக்கை

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் கள அலுவலகத்தில் வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் யாழ்ப்பாணப் பிரதிநிதி காயத்திரி குமரனிடம் நேரடியாகக் இந்த மனுவை கையளித்துள்ளனர்.
மக்கள் பணிமனைத் தவிசாளரும், வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளருமான சுபியான் மெளலவி மற்றும் அமைப்பாளர் ஏ.சி.எம்.கலீல் ஆகியோர் இணைந்து குறித்த மனுவினை நேற்று(14) கையளித்துள்ளனர்.
மனு தொடர்பான உறுதிப்பாடு

இதேவேளை, மனுவினை பெற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் யாழ்ப்பாண பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் மூலம் குறித்த மனுவினை உடனடியாக ஜெனீவாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam