உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பிற்கு எதிரான மனு குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஜூலை 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி, மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை ஆகியன இது தொடர்பில் மனுக்களை தாக்கல் செய்தன.
2023ஆம் ஆண்டு மார்ச் 09 அன்று உள்ளூட்சித் தேர்தலை முன்னர் திட்டமிட்டபடி நடத்தத் தவறியதன் மூலம் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு குறித்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.
விசாரணைக்கு எடுக்கப்பட்ட மனு
இந்த மனுக்கள் இன்று (24.07.2023) நீதியரசர் புவனேக அலுவிஹாரே தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும் நீதியரசர் அமர்வில் அங்கம் வகிக்கும் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன, குறித்த நேரத்தில் மற்றுமொரு வழக்கு விசாரணையில் பங்குபற்றியிருந்தமையினால், மனுக்கள் மீதான பரிசீலனையை ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
